புனித வின்சென்ட் தே பவுல் சபை 24.11.2019 ஞாயிறு அன்று புதுகை திரு இருதய கிளை சபையினரால் மரித்த ஆன்மாக்கள் நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10.00 மணி அளவில் R.C.நடுநிலைப்பள்ளியில் ஏழை எளியோருக்கு உடை, உணவு, கல்வி உதவித்தொகை, பள்ளி சீருடை வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தலைவர் S.ஜேசுராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தஞ்சை ஓசானாம் முதியோர் இல்ல காப்பாளர் சகோதரர் இதய அரசு கலந்து கொண்டார். நமது பங்குத்தந்தையும், ஞான ஆலோசகருமான பேரருட்திரு U.சவரிமுத்து அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் உதவி பங்கு தந்தை அருட்திரு A.அலெக்சாண்டர், அருட்சகோதரி ஜுலியட் மணி, மூத்த ஆலோசகர் சகோ.சேகர், வட்டார சபை தலைவர் சகோ.டோம்னிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திரு இருதய ஆண்டவர் வளாகத்தில் 21.09.2019 (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு புனித வின்சென்ட் தே பவுல் தஞ்சை மத்திய சபையின் கீழ் செயல்படும் புதுகை வட்டார சபைக்கு உட்பட்ட திரு இருதய கிளை சபையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழ்நாடு ஒருங்கிணைப்புத் தலைவர் சகோ.சந்தியாகு மாணிக்கம், இந்திய செயல் திட்ட அலுவலர் சகோ.ஜுட் மங்கள் ராஜ், தஞ்சை மத்திய சபையின் தலைவர் சகோ.அந்தோணி ராஜ், தஞ்சை மத்திய சபையின் பொருளாளர் சகோ.ஆல்பர்ட் குமார், தஞ்சை மத்திய சபையின் செயல் திட்ட அலுவலர் சகோ.ஜோசப், நமது பங்கின் உதவி பங்குத் தந்தை அருட்திரு.அலெக்சாண்டர்
அனைவரையும் புதுகை வட்டார சபையின் தலைவர் வரவேற்றார். அதனை தொடர்ந்து மத்திய சபை தலைவர் சகோ.அந்தோணி ராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தை சபையின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள். தஞ்சை மத்திய சபை தலைவர் முன்மொழிய உதவி பங்குத் தந்தை முதல் பயனாளிக்கு ரூபாய்.20,000/- க்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஒருங்கிணைப்புத் தலைவர், இந்திய செயல் திட்ட அலுவலர், மத்திய சபையின் மூத்த ஆலோசகர் சகோ.சேகர், வட்டார சபை தலைவர் சகோ.டோம்னிக், திரு இருதய கிளைச் சபைத் தலைவர் சகோ.ஜேசுராஜ் பயனாளிகளுக்கு தலா 20,000/- க்கான காசோலையை வழங்கினார்கள். மொத்தம் வழங்கிய தொகை ரூபாய். 1,40,000/- பயனாளிகள் விபரம்:
வீடு பழுது பார்க்க: A.செபஸ்தியான், G.இருதய ராஜ், M.ராஜம், மாசிலாமணி, ரத்தினம். ஆடு வாங்கி வளர்ப்பதற்கு: S.ஆரோக்கிய ஜெயராணி, A.குணசேகரி. இந்நிவாரணம் வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும் சபையின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தஞ்சாவூர் புனித வினசென்ட் தே பவுல் மத்திய சபையின் 37-ம் ஆண்டு பேரவை கூட்டம் 28.07.2019 ஞாயிறு அன்று மத்திய சபை தலைவர் S.அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. அருட்திரு. SJM.வியானி அருளுரை வழங்க, உலக மகா சபையின் மூத்த பொது துணை தலைவர் சகோ.T.ஜோசப் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். மத்திய சபையின் முன்னாள் தலைவரும், மத்திய சபையின் மூத்த ஆலோசகரும் புதுகை திரு. இருதய கிளைச் சபையின் ஆலோசகருமான M.சேகர் வாழ்த்துரை வழங்க, கூட்டத்தில் அதிக தத்துக் குடும்பங்களை தத்தெடுத்து பராமரித்ததர்காக புதுகை திரு இருதய கிளை சபையை தேர்ந்தெடுத்து மத்திய சபைத் தலைவர் ரூபாய். 2000/- க்கான காசோலையை சபைத் தலைவர் திரு.S.சேசுராஜ் அவர்களிடம் வழங்கினார். புதுகை வட்டார சபைத் தலைவர் திரு.S.டோம்னிக் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.