Holy Mass: Sunday: 6AM, 8AM, 12 Noon & 6PM
Call us now +91-4322-221662
Home
About
Services
Institutions
Priests
Gallery
Parish Sub Churches
Priest Gallery
Bishops
Parish Priests
Asst Parish Priests
Priests from the Parish
Nuns from the Parish
Centenary Celebrations
Vincent De Paul
Church Events
Church Videos
Contact
X
Holy Gospel Reading Today
இன்றைய நற்செய்தி விவிலிய வாசகம்
புனித மத்தேயு எழுதிய நற்செய்தி, அதிகாரம் 6, இறைவசனங்கள் 1-6, 16-18
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு...கிறிஸ்துவே உமக்கு புகழ்...
Today Bible Reading from Holy Gospel
Gospel St. Mathews, Chapter 6, Verses 1-6, 16-18
'Be careful not to parade your uprightness in public to attract attention; otherwise you will lose all reward from your Father in heaven. So when you give alms, do not have it trumpeted before you; this is what the hypocrites do in the synagogues and in the streets to win human admiration. In truth I tell you, they have had their reward. But when you give alms, your left hand must not know what your right is doing; your almsgiving must be secret, and your Father who sees all that is done in secret will reward you. 'And when you pray, do not imitate the hypocrites: they love to say their prayers standing up in the synagogues and at the street corners for people to see them. In truth I tell you, they have had their reward. But when you pray, go to your private room, shut yourself in, and so pray to your Father who is in that secret place, and your Father who sees all that is done in secret will reward you. 'When you are fasting, do not put on a gloomy look as the hypocrites do: they go about looking unsightly to let people know they are fasting. In truth I tell you, they have had their reward. But when you fast, put scent on your head and wash your face, so that no one will know you are fasting except your Father who sees all that is done in secret; and your Father who sees all that is done in secret will reward you.
The Gospel of the Lord...Praise to you Lord Jesus Christ...