புதுகை திரு இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை அவர்களும் வின்சென்ட் தே பவுல் சபையும் இணைந்து 2018ல் "பிடி அரிசி காணிக்கை" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி PMSSS "பசி பிணி காணிக்கை" க்கு நன்கொடை வசூல் செய்தனர். இதற்காக சென்ற வருடம் தவக்காலம் தொடங்கியதும் பங்கில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பைகளும் சேமிப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டு பெரிய வியாழன் அன்று 1200 கிலோ அரிசியும் 66,000 ரூபாயும் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. அதே போல் 2019 இவ்வருடமும் வின்சென்ட் தே பவுல் சபையின் தலைவர் திரு. ஜேசுராஜ், சபையின் உறுப்பினர்கள் மற்றும் அன்பியம் தலைவர் மூலம் பங்கில் உள்ள குடும்பங்களுக்கு பைகளும் சேமிப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டு பெரிய வியாழன் அன்று 1500 கிலோ அரிசியும் 64,144 ரூபாயும் நன்கொடையாக வசூலிக்கப்பட்டு நமது பங்கு தந்தை அவர்களால் PMSSS ன் "பசி பிணி காணிக்கை" க்கு வழங்கப்பட்டது.