Society of Vincent De Paul Events and Activities

Gaja Cyclone Christmas Eve Gaja Funding Pidi Arisi Kanikkai

புனித வின்சென்ட் தே பவுல் சபை திரு இருதய கிளை சபையின் பங்கிற்கு உட்பட்ட நீதிநாதபுரத்தில் (25.06.2020) வியாழக்கிழமை காலை நல் உள்ளம் கொண்ட கொடையாளர்கள் உதவியோடு கிராமபுற ஏழை மக்களுக்கு பால் மாடு, ஆடு வழங்கும் விழா நடைபெற்றது. நமது பங்கின் உதவி பங்கு தந்தை அருட்திரு A.அலெக்சாண்டர் அவர்கள் ஆசி வழங்கி முதல் பயனாளி கூத்தம்பட்டி அந்தோணிக்கு ஆடு வழங்கினார். அதனை தொடர்ந்து பூவம்பட்டி செல்வி, சேப்ளாம்பட்டி ராணிக்கு பால் மாடு வழங்கபட்டது. இந்நிகழ்வில் சபைத் தலைவர் S.ஜேசுராஜ், செயளாளர் H. எட்வர்ட் பால், பொருளாளர் S.டோம்னிக், சிறப்பு அழைப்பார்கள் மத்திய சபை மூத்த துணை தலைவர் M.சேகர், வன்னியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சகோ. செந்தில் குமார் கலந்து கொண்டனர். கொடையாளர்களை கண்டெடுத்து ரூபாய் 90,000/- மதிப்புள்ள இவ்வுதவிகள் செய்வதற்கு உதவி புரிந்த எமது வின்செந்தியர் நீதிநாதபுரம் சகோ. செபஸ்தியான் அவர்கள் குடும்பத்திற்கு சபையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020

புனித வின்சென்ட் தே பவுல் சபை, திரு இருதய கிளை சபை சார்பாக 19.05.2020 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு கொரோனா நிவாரணம் சபையின் 30 தத்து குடும்பங்களுக்கு ரூபாய் 500/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கு தந்தை பேரருட் திரு U.சவரிமுத்து அடிகளார், உதவி பங்கு தந்தை அருட்திரு. A.அலெக்சாண்டர், வட்டார சபை தலைவர் S.டோம்னிக், மத்திய சபை மூத்த துணை தலைவர் M.சேகர், சபை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் H.எட்வர்ட் பவுல், துணை தலைவர் சகோ. ஆரோக்கிய சகாய தாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Corona2020
Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020
Corona2020 Corona2020

புனித வின்சென்ட் தே பவுல் திரு இருதய கிளை சபையின் சார்பாக (22.12.19.) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு புனித வின்சென்ட் தே பவுல், அருளாளர் பிரடரிக் ஓசானாம் படம் அச்சிடப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான காலண்டரை நமது பங்குத்தந்தை பேரருட் திரு.சவரிமுத்து வழங்க, நமது சபையின் முன்னாள் தலைவரும் சபையின் உறுப்பினருமான சகோ.ஆரோக்கியசாமி பெற்று கொண்டு வெளியிட்டார். அதனை தொடர்ந்து சபையின் தத்து குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் முன்னிட்டு ரூ.400/- மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தலைவர் ஜேசுராஜ், பொருளர் டோம்னிக், சிறப்பு விருந்தினராக பங்கு மன்ற செயலர் அருளானந்து மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டன.
Vincent De Paul
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent De Paul

புனித வின்சென்ட் தே பவுல் சபை தஞ்சாவூர் மத்திய சபை சார்பில் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தியானம் மற்றும் கருத்தரங்கு பூண்டி மாதா தியான மையம் - பூண்டியில் நடைபெற்றது. மத்திய சபை தலைவர் S.அந்தோணி ராஜ் தலைமையில், M.குழந்தை ராஜ், இயக்குனர் பூண்டி மாதா தியான மையம் வாழ்த்தரை வழங்க, தியான அமர்வு வழங்கியவர் அருட்பணி M.A.ஜோ, சேசு சபை, புனித வளனார் கல்லூரி - திருச்சி. 08.03.2020 ஞாயிறன்று கருத்தரங்கு, பட்டி மன்றம் மற்றும் சபையின் செயல்பாடுகள் பற்றி பொறுப்பாளர்கள் பேசினர். மத்திய சபை மூத்த துணை தலைவர் M.சேகர், மத்திய சபை சிறப்பு அழைப்பாளர் மற்றும் உலக மகா சபையின் மூத்த பொது துணை தலைவர் T.ஜோசப் பாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அனைத்து வட்டாரசபை தலைவர், கிளை சபை பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020 Poondi2020
Poondi2020

புனித வின்சென்ட் தே பவுல் சபை 24.11.2019 ஞாயிறு அன்று புதுகை திரு இருதய கிளை சபையினரால் மரித்த ஆன்மாக்கள் நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10.00 மணி அளவில் R.C.நடுநிலைப்பள்ளியில் ஏழை எளியோருக்கு உடை, உணவு, கல்வி உதவித்தொகை, பள்ளி சீருடை வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தலைவர் S.ஜேசுராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தஞ்சை ஓசானாம் முதியோர் இல்ல காப்பாளர் சகோதரர் இதய அரசு கலந்து கொண்டார். நமது பங்குத்தந்தையும், ஞான ஆலோசகருமான பேரருட்திரு U.சவரிமுத்து அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் உதவி பங்கு தந்தை அருட்திரு A.அலெக்சாண்டர், அருட்சகோதரி ஜுலியட் மணி, மூத்த ஆலோசகர் சகோ.சேகர், வட்டார சபை தலைவர் சகோ.டோம்னிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Vincent De Paul
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent

திரு இருதய ஆண்டவர் வளாகத்தில் 21.09.2019 (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு புனித வின்சென்ட் தே பவுல் தஞ்சை மத்திய சபையின் கீழ் செயல்படும் புதுகை வட்டார சபைக்கு உட்பட்ட திரு இருதய கிளை சபையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழ்நாடு ஒருங்கிணைப்புத் தலைவர் சகோ.சந்தியாகு மாணிக்கம், இந்திய செயல் திட்ட அலுவலர் சகோ.ஜுட் மங்கள் ராஜ், தஞ்சை மத்திய சபையின் தலைவர் சகோ.அந்தோணி ராஜ், தஞ்சை மத்திய சபையின் பொருளாளர் சகோ.ஆல்பர்ட் குமார், தஞ்சை மத்திய சபையின் செயல் திட்ட அலுவலர் சகோ.ஜோசப், நமது பங்கின் உதவி பங்குத் தந்தை அருட்திரு.அலெக்சாண்டர் அனைவரையும் புதுகை வட்டார சபையின் தலைவர் வரவேற்றார். அதனை தொடர்ந்து மத்திய சபை தலைவர் சகோ.அந்தோணி ராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தை சபையின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள். தஞ்சை மத்திய சபை தலைவர் முன்மொழிய உதவி பங்குத் தந்தை முதல் பயனாளிக்கு ரூபாய்.20,000/- க்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஒருங்கிணைப்புத் தலைவர், இந்திய செயல் திட்ட அலுவலர், மத்திய சபையின் மூத்த ஆலோசகர் சகோ.சேகர், வட்டார சபை தலைவர் சகோ.டோம்னிக், திரு இருதய கிளைச் சபைத் தலைவர் சகோ.ஜேசுராஜ் பயனாளிகளுக்கு தலா 20,000/- க்கான காசோலையை வழங்கினார்கள். மொத்தம் வழங்கிய தொகை ரூபாய். 1,40,000/- பயனாளிகள் விபரம்: வீடு பழுது பார்க்க: A.செபஸ்தியான், G.இருதய ராஜ், M.ராஜம், மாசிலாமணி, ரத்தினம். ஆடு வாங்கி வளர்ப்பதற்கு: S.ஆரோக்கிய ஜெயராணி, A.குணசேகரி. இந்நிவாரணம் வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும் சபையின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
Vincent De Paul
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent

புனித வின்சென்ட் தே பவுல் திரு இருதய கிளைச் சபையின் கூட்டம் (04.08.19) ஞாயிறன்று நடைப்பெற்றது. கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக சபையின் நீண்ட நாள் கொடையாளரும் வேங்கிடகுளம் தூய வளனார் மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்தவரும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருமான திரு.ஆல்பர்ட் ரூபன் அவர்கள் பணி நிறைவு பெற்றதை பாராட்டி சபையோர் முன்னிலையில் தலைவர் பொன்னாடை போற்றி சபையின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
Vincent De Paul
Vincent De Paul

தஞ்சாவூர் புனித வினசென்ட் தே பவுல் மத்திய சபையின் 37-ம் ஆண்டு பேரவை கூட்டம் 28.07.2019 ஞாயிறு அன்று மத்திய சபை தலைவர் S.அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. அருட்திரு. SJM.வியானி அருளுரை வழங்க, உலக மகா சபையின் மூத்த பொது துணை தலைவர் சகோ.T.ஜோசப் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். மத்திய சபையின் முன்னாள் தலைவரும், மத்திய சபையின் மூத்த ஆலோசகரும் புதுகை திரு. இருதய கிளைச் சபையின் ஆலோசகருமான M.சேகர் வாழ்த்துரை வழங்க, கூட்டத்தில் அதிக தத்துக் குடும்பங்களை தத்தெடுத்து பராமரித்ததர்காக புதுகை திரு இருதய கிளை சபையை தேர்ந்தெடுத்து மத்திய சபைத் தலைவர் ரூபாய். 2000/- க்கான காசோலையை சபைத் தலைவர் திரு.S.சேசுராஜ் அவர்களிடம் வழங்கினார். புதுகை வட்டார சபைத் தலைவர் திரு.S.டோம்னிக் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent Vincent
Vincent

On Sunday, 7th October 2018, the Society of Vincent De Paul from Sacred Heart Church, Pudukkottai Distributes Rice for the 20 Adopted Families 10 Kg for Each Family which happens on Every First Sunday in the Month. This Sunday, Vincent De Paul President Mr.S.Jesuraj, Vice President Mr.N.A.S.Doss, Secretary Mr.H.Edward Paul and Treasurer Mr.S Domnic and all the Other Members Participates and Distributes Rice to the Adopted Families.


Church

Vincent De Paul 07 Oct 2018

Church

Vincent De Paul 07 Oct 2018


On Sunday, 9th September 2018, the Society of Vincent De Paul from Sacred Heart Church, Pudukkottai Sponsored a Walking Stick Worth Rs.600 to Mrs.Jayaseeli who Belongs to the Adopted Family.


Church

Vincent De Paul 09 Sep 2018


On Sunday, 2nd September 2018, the Society of Vincent De Paul from Sacred Heart Church, Pudukkottai Sponsored Rs.4000 to the Adopted Family Mrs.Leema Rose for her Daughter's Higher Studies.


Church

Vincent De Paul 02 Sep 2018


On Sunday, 26th August 2018, the Society of Vincent De Paul from Sacred Heart Church, Pudukkottai Distributed Grocery Worth Rs.500 to the 20 Adopted Families During Christmas and On Birthday of Blessed Frederick Ozanam Presided by the Parish Priest and Asst.Parish Priest.

Church

Vincent De Paul 26th Aug 2018

Church

Vincent De Paul 26th Aug 2018

Church

Vincent De Paul 26th Aug 2018

Church

Vincent De Paul 26th Aug 2018

Church

Vincent De Paul 26th Aug 2018

Contact Us

Contact Us for all your Spiritual Needs and Assistance like Prayer Request, Confessions, Councelling, Donations, Offerings, Testimonies, Mass Timings, Special Prayers, Home Blessings, Cemetery Blessings, Holy Communion, Baptism, Latest News and Special Announcements.

Rev.Fr.A.Savarinagayam
Parish Priest
Phone: 04322-221662
Rev.Fr.S.A.Santhiyagu
Asst.Parish Priest
Phone: 04322-221662
Mr.A.Thomas, Chairman
Anbiyam Committee
Phone: +91-98424 65815
Mr.S.Jesuraj, Secretary
Vincent De Paul
Phone: +91-99423 52277
Church

Contact Church

Sacred Heart Church
Marthandapuram,
Pudukkottai - 622001.
Tamil Nadu, India.
P: 99423 52277 / 98424 65815
E: info@sacredheartchurchpdkt.com